ஜம்மு
காங்கிரஸ் கட்சியின் ஜம்மு காஷ்மீர் தேர்தல் வாக்குறுதிகளை ராகுல் காந்தி அறிவித்துள்ளார்
.
அரசியல் கட்சிகள் ஜம்மு காஷ்மீரில் -2ம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதன்படி மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல்காந்தி, ஜம்மு காஷ்மீரில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகையில் ஜம்மு காஷ்மீருக்கான தேர்தல் வாக்குறுதிகளை அவர் அறிவித்துள்ளார்.
ராகுல் காந்தி,
“ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், ஜம்மு காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்படும். குடும்பத் தலைவர்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித் தொகை, சுய உதவிக் குழுக்கள் மூலம் ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். குடும்ப ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில் ரூ.25 லட்சம் வரை மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் அமல்படுத்தப்படும்.
ஒவ்வொரு தாலுகாவிற்கும் ஆம்புலன்ஸ் மற்றும் மொபைல் கிளினிக் தொடங்கப்படும். காஷ்மீர் பண்டிட்களுக்கான மன்மோகன் சிங் திட்டம் முழுவதுமாக செயல்படுத்தப்படும். ஜம்மு காஷ்மீரில் காலியாக உள்ள 1 லட்சம் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படுவதோடு, ஒவ்வொரு நபருக்கும் 11 கிலோ இலவச ரேஷன் வழங்கப்படும்.”
எனத் தெரிவித்துள்ளார்.