புதுடெல்லி:

மக்களவை தேர்தலுக்கான மூன்றாம் கட்ட தேர்தல் பிரச்சாரம்
15 மாநிலங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது.
இங்குள்ள 116 தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை நடக்கிறது .

குஜராத் மாநிலத்தில் 26 தொகுதிகளிலும்,
கேரளாவில் 20 தொகுதிகளிலும் , கர்நாடகாவில் 14 தொகுதிகளிலும், மகாராஷ்டிராவில் 14 தொகுதிகளிலும், உத்தரபிரதேசத்தில் 10 தொகுதிகளிலும் மேற்கு வங்க மாநிலத்தில் 5 தொகுதிகளிலும் மூன்றாம் கட்ட வாக்கு பதிவு நடக்கிறது.

பாஜக தலைவர் அமித் ஷா போட்டியிடும் காந்திநகர் தொகுதியிலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் உத்திரப்பிரதேச மாநிலத்தில் அமேதி மற்றும் கேரள மாநிலத்தில் வயநாடு தொகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு நடக்கிறது.

உத்தரபிரதேச மாநிலம் மணிப்பூரி தொகுதியில் சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ்,
கர்நாடக மாநிலம் குல்பர்கா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பாஜகவின் உமேஷ் யாதவ் ஆகியோர் இன்று வாக்குப்பதிவை
எதிர்கொள்கின்றனர்.

மூன்றாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது நன்னடத்தை விதியை மீறியதாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 72 மணி நேரம் பிரச்சாரம் செய்யவும், பாஜகவைச் சேர்ந்த ஜெயப்பிரதாவை அநாகரிகமாக பேசியதாக சமாஜ்வாதி கட்சியின் ஆசம் கானுக்கு 72 மணி நேரம் பிரச்சாரம் செய்யவும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதிக்கு 48 மணி நேரம் பிரச்சாரம் செய்யவும், மத்திய அமைச்சர் மேனகா காந்திக்கு 48 மணி நேரம் பிரச்சாரம் செய்யவும் தேர்தல் ஆணையம் தடைவிதித்தது குறிப்பிடத்தக்கது.