டில்லி:

லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டு 4 ஆண்டுகள் கடந்தும் இன்னும் லோக்பால் அமைக்கப்படவில்லை என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மத்திய பாஜ அரசுமீது  குற்றம் சாட்டிய நிலையில், அதுகுறித்த வழக்கில், லோக்பால் அமைப்புக்கு உறுப்பினர்களை தேர்வு செய்வது மார்ச் 1ந்தேதி ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என்று மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் உத்தரவிட்டு உள்ளது.

இதன் காரணமாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.

லோக்பால் சட்டம் நிறைவேற்றப்பட்டு 4 ஆண்டுகள்  ஆகிவிட்டது, ஆனால், இன்னும் லோக்பால் அமைக்கப்பட வில்லை. எப்போது வரை இந்த தவறை தொடர்ந்து செய்வீர்கள் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள் என்று கடந்த மாதம் 6ந்தேதி ராகுல்காந்தி பிரதமர் மோடிக்கு கேள்வி விடுத்திருந்தார்.

இந்நிலையில், லோக் பால் அமைப்பின் உறுப்பினர்களை தேர்வு செய்வது தொடர்பாக விவாதிக்க மார்ச் ஒன்றாம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டின் உயர் பதவிகள் வகிப்பவர்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வகை செய்யும் வகையில், லோக்பால் சட்டமசோதா 2013ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட போதும், அதன் உறுப்பினர்களைத் தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து, லோக் பால் உறுப்பினர்களை விரைவாக நியமிக்க வலியுறுத்தி தன்னார்வ அமைப்புகள் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தபோது, மார்ச் ஒன்றாம் தேதி தேர்வுக் குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லோக்பால் மசோதா குறித்து  ராகுல் குற்றச்சாட்டு பற்றிய செய்திக்கு… கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

https://patrikai.com/rahul-gandhi-attacks-government-over-delay-in-appointing-lokpal/