IPL 2106 நேற்று டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நேற்று இரவு நடந்த 33-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ்-ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற புனே கேப்டன் டோனி முதலில் பந்து வீச முடிவு செய்தார்.
இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் டெல்லி அணியை எதிர்கொண்டது புனே அணி. டெல்லி முன்ணி வீரர்கள் இந்த ஆட்டதில் அடாதது பெரும் கேள்வியை எழுப்பியது. ஜாகிர் கான் பதிலாக கேப்டன் பொறுப்பை டுமினி கவனித்தார். புனே அணியில் புதிதாக சேர்ந்த ஆஸ்திரேலிய அதிரடி வீரர்கள் உஸ்மான் கவாஜா, ஜார்ஜ் பெய்லி ஆகியோர் இந்த போட்டில் களம் இறக்கப்பட்டனர்.
களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். கருண் நாயர் 32, டுமினி 34 ரன்களும் எடுத்தனர். அதிரடியாக பிராத்வெயட் 8 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 162 ரன்கள் எடுத்தது.
163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய புனே அணி ரஹஅனவின் பொறுமையான ஆட்டம் ஒருபுறம் செய்ய மறுபுறம் அதிரடியாக உஸ்மான் கவாஜா 30 ரன்னிலும், சவுரப் திவாரி 21 ரன்னிலும், கேப்டன் டோனி 27 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். ரஹானே 63 ரன்னுடனும் (48 பந்துகளில் 7 பவுண்டரியுடன்), திசரா பெரேரா ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.