டெல்லி: ரஃபேல் விமானம் ஒப்பந்த ஊழல் குறித்த ராகுல் மற்றும் காங்கிரசின் நிலைப்பாடு நிரூபணம் ஆகி உள்ளது உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பான ரன்தீப்சிங் சுர்ஜிவாலா தெரிவித்து உள்ளார். மேலும், ரபேல் ஊழல் குறித்து ஜேபிசி (நாடாளுமன்ற கூட்டுக்குழு) விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு, காங்கிரஸ் ஆட்சியின்போது இந்தியா பிரான்ஸ் இடையே ரஃபேல் போர் விமானம் வாங்குவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்பிறகு ஆட்சியை கைப்பற்றிய மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு 2015-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு பிரான்ஸ் அரசாங்கத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டது.
அதாவது, காங்கிரஸ் ஆட்சியின்போது ஒரு ரஃபேல் போர் விமானத்தின் விலை 526 கோடி ரூபாய் என நிர்ணயக்கப்பட்டு,பிரான்ஸிடமிருந்து 126 ரஃபேல் விமானங்களை வாங்க அப்போதைய பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்ட்டோடு மன்மோகன் சிங் அரசு ஒப்பந்தம் போட்டது. அடுத்து வந்த தேர்தலில் இரு நாடுகளிலுமே ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், ரஃபேல் ஒப்பந்தம் கைவிடப்பட்டது.
பின்னர், 2015ம் ஆண்டு பாஜக ஆட்சியின் பிரதமர் நரேந்திர மோடி – பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான் இடையே ரஃபேலுக்கான புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி ஒரு விமானத்தின் விலை 1,670 கோடி ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு 36 ரஃபேல் விமானங்கள், மொத்தம் 59 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க முடிவு செய்யப்பட்டது.
இந்த விலை நிர்ணயித்தில் மாபெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும், காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால், இந்த ஒப்பந்ததில் முறைகேடு நடைபெறவில்லை என்று மோடி அரசு மறுத்து வந்தது.
இந்த நிலையில், பிரான்ஸ் ஊடகம் ஒன்றில், ரஃபேர்ல ஒப்பந்த ஊழல் தொடர்பான செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்படி, ரஃபேல் ஒப்பந்தத்திற்காக பிரான்ஸ் நாட்டின் டசால்ட் (Dassault) ஏவியேஷன் நிறுவனம் இந்தியாவின் துணை நிறுவனமான டெஃப்ஸிஸ் (Defsys) நிறுவனத்துக்கு 8.6 கோடி ரூபாயை லஞ்சமாக கொடுத்துள்ளது என்று பிரான்ஸ் நாட்டின் ஊழல் தடுப்பு துறை கண்டுபிடித்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதையடுத்து, இது தொடர்பான வழக்கை விசாரிக்க பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நீதிபதியான ஜீன் பிரான்கோயிஸ் போநெர்ட் (Jean François Ponert) நியமனம் செய்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னதாக இந்த வழக்கை விசாரிக்க எலியன் ஹவுலெட் (Elien Howlett) என்பவர் நியமிக்கப்பட்டு, பின்னர் அவர் வெளியேறினார். இந்த நிலையில் புதிய நீதிபதி நியமனம் செய்யப்பட்டு உள்ளது இரு நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், செய்தி தொடர்பாளருமான ரன்தீப்சிங் சுர்ஜிவாலா காட்டமாக விமர்சித்து உள்ளது.
இறுதியாக ரஃபேல் ஊழல் அம்பலமாகி உள்ளது.
ரபேல் ஊழல் குறித்து ஜேபிசி (நாடாளுமன்ற கூட்டுக்குழு) விசாரிக்க வேண்டும்
மிகப்பெரிய ஊழல், தேசத்துரோகம், பொது செலவினங்களுக்கு இழப்பு ஆகியவை சம்பந்தப்பட்ட ‘ரஃபேல் மோசடி’ பற்றிய அவதூறான வெளிப்பாடு இறுதியாக கண்டுபிடிக்கப்பட்டு அம்பலப்படுத்தப்பட்டு, நீதிமன்ற விசாரணைக்கு வைக்கப்பட்டுள்ளது
காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் காந்தி நிலைப்பாடு இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது என்று ததெரிவித்து உள்ளார்.
ரஃபேல் போர் விமான சர்ச்சையானது நீடித்து வருதால், இது மத்திய பாஜக அரசுக்கும், பிரான்ஸில் இம்மானுவேல் மேக்ரான் அரசுக்கும் பின்னடவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறத.