அகமதாபாத்:

குஜராத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ரஃபேல் குற்றவாளிகளுக்கு சட்டப்படி  தண்டனை பெற்றுத்தரப்படும் என்று கூறினார்.

குஜராத்தில் நேற்று நடைபெற்ற பிரமாண்ட காங்கிரஸ் பொதுக்ழுகூட்டத்தில் முதன் முறையாக பிரியங்கா காந்தி பேசினார். அதைத்தொடர்ந்து ராகுல் காந்தி பேசினார். அப்போது,   ‘தேர்தல் ஆதாயத்துக்காக, எதிர்க்கட்சிகளின் தேசபக்தியையும், கடமையையும், பிரதமர் மோடி, கேள்வி கேட்கிறார். அரசின் நிர்வாக தோல்விகளை மறைக்க, மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கில், நாட்டின் பாதுகாப்பை, பிரதமர் மோடி பயன்படுத்துகிறார் என்றவர்,

பா.ஜ.,வின், மதவெறி, வெறுப்பு, பிரிவினை போன்ற கொள்கைளை தோற்கடிப்பதை விட, வேறு பெரிய தியாகம் எதுவும் நாட்டில் எதுவும் இல்லை என்று கூறினார்.

நாட்டில் நடைபெற்றுள்ள மிகப்பெரிய ஊழலான  ரஃபேல் போர் விமான ஒப்பந்தம்  குறித்த எனது கேள்விகளுக்கு பிரதமரோ, ராணுவ அமைச்சரோ சரியான பதில்களை தர மறுக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் முறையான விசாரனை நடத்தி குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை பெற்று தரப்படும் என்று கூறினார்.