உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியை சேர்ந்த அப்துல் மஜீத் கான், தையல்வேலை செய்து வந்தார்.

அதே பகுதியில் வசிக்கும் சலீம் என்பவர், மஜீத் கானிடம் சட்டை தைய்க்க துணி வாங்கி கொடுத்திருந்தார்.

அந்த சட்டையை மஜீத் சரியாக தைய்க்கவில்லை என கூறி, அவருடன் சலீம் சண்டை போட்டுள்ளார்.

அப்துல் மஜீத் கான் குடும்பத்தினர்

வாக்கு வாதம் முற்றிய நிலையில், மஜீத்தின் கழுத்தை நெரித்து சலீம் கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து மஜீத்தின் மகன் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

எனினும் பிரேத பரிசோதனையில், மஜீத் இறந்ததற்கான காரணம் தெரியவில்லை.

சலீம் கைது செய்யப்பட்டால், உண்மை தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

– பா. பாரதி