சரத்குமார், ராதிகா குறித்த செக் மோசடி வழக்கு விசாரணை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மோசடி வழக்கில் ராதிகாவுக்கும் சரத்குமாருக்கு ஓராண்டு சிறை தண்டனை என்ற செய்தி பரவியதும், ராதிகாவா இப்படி? சரத்குமார் ஏன் இப்படி செய்தார்? என்ற அதிர்ச்சி கேள்விகள் மக்கள் மனதில் எழுந்தன.

ஆனால், வழக்கு முறையாக நடந்து வருவதால் இதை பற்றி அவ்வளவாக யாரும் அதற்கு பிறகு பேச்செடுக்கவில்லை.

இந்நிலையில் ராதிகா சரத்குமாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு என்றும், சென்னையில் இருக்கும் ஒரு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி இருக்கிறார் என்றும் செய்திகள் வெளியானது.

இதனை தொடர்ந்து “எனக்கு வெறும் உடம்பு வலி தான்.. கொரோனா எல்லாம் கிடையாது.. நான் வேலைக்கு வந்துட்டேன்.. என் உடல்நலம் மற்றும் வழக்கு குறித்து ஆன்லைன் மீடியாக்கள் கண்டதையும் எழுதுகின்றன.. என்று ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

எல்லாருடைய அன்புக்கும் நன்றி… என்னு கொரோனா வைரஸ் பாதிப்பு எல்லாம் கிடையாது.. தடுப்பூசியின் 2வது டோஸ் எடுத்துக்கிட்டேன்.. அதுக்காக உடம்பு வலி மட்டுமே.. என்னுடைய உடல்நலம் மற்றும் வழக்கு குறித்து ஆன்லைன் மீடியாக்கள் கண்டதையும் எழுதுகிறார்கள். நாங்கள் வழக்கு தொடர்பாக மேல்கோர்ட்டில் முறையிடுவோம். இப்போ நான் வேலைக்கு வந்துவிட்டேன் என்று பதிவிட்டுள்ளார். ராதிகாவின் இந்த ட்வீட்டை பார்த்த பிறகுதான் ரசிகர்கள் தரப்பு நிம்மதி ஆகி உள்ளது.