சின்னத்திரையில் பிசியாக இருந்த ராதிகா சரத்குமார் தன் கணவருக்காக முழு நேர அரசியலில் குதித்துள்ளார். இதற்காக அவர் சித்தி 2 சீரியலில் இருந்து வெளியேறிவிட்டார். தமிழக சட்டசபை தேர்தல் வரும் 6ம் தேதி நடக்கவிருக்கிறது.
இந்நிலையில் ராதிகாவின் குடும்பத்தில் ஒருவராக இருந்த சிரில் என்பவர் கடந்த 21ம் தேதி காலமானார். அவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு ராதிகா :
சிரில் அங்கிள் அல்லது நாங்கள் அவரை அன்புடன் சிரில் அண்ணா என்று அழைப்போம். அவர் எங்கள் குடும்பத்தில் முக்கிய பங்கு வகித்தவர். எங்களை வளர்த்தவர். கஷ்ட காலங்களில் எங்களுடன் இருந்தவர். எங்கள் அம்மாவுக்காக அனைத்தையும் தியாகம் செய்தவர். அவருக்கு குட்பை சொல்ல ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அவரின் ஆத்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டுள்ளார்.
Cyril uncle or as we fondly call him- Cyril Anna.
He was a integral part of our family, he bought us up and stood by us through the lowest of lows.
He sacrificed everything for our mom and was her rock.
Share so many memories with him that is hurts so much to say good bye! RIP pic.twitter.com/vrpJjb387Q— Radikaa Sarathkumar (@realradikaa) March 21, 2021