சாஹோ படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடித்து வரும் படம் பிரபாஸ் 20.இந்த படத்தை ராதாகிருஷ்ண குமார் இயக்குகிறார்.UV க்ரியேஷன்ஷுடன் இணைந்து கோபி கிருஷ்ணா மூவிஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

பூஜா ஹெக்டே இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார். ராதே ஷ்யாம் என்று இந்த படத்திற்கு படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர். தமிழ்,தெலுங்கு,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார் .

ரதே ஷ்யாம் படப்பிடிப்பு கொரோனா கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. .இப்படத்தில் பிரபாஸ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஒரு கதாபாத்திரம் தற்போதைய காலகட்டத்தில் உள்ளது போலவும் இன்னொரு கதாபாத்திரம் கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த போலவும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

ராதே ஷ்யாம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில் இந்தப் படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. வருகின்ற பிப்ரவரி 14ஆம் தேதி படத்தின் டீசர் வெளியாகும் என்று ப்ரீ டீசர் ஒன்று வெளியிட்டு உறுதி செய்திருக்கின்றனர்.