நடிகை தமன்னா பாட்டியா இந்தியில் நடித்து வெளிவந்த ‘ஸ்ட்ரீ 2’ படம் நல்ல வரவேற்பை பெற்றது அதில் ‘ஆஜ் கி ராத்’ பாடலுக்கு அவர் ஆடிய ஆட்டம் பாராட்டைப் பெற்றது.
இதையடுத்து பிரபல பேஷன் டிசைனர் கரண் தொரானியின் ஃபேஷன் லேபிளுக்காக ராதா-கிருஷ்ணா தீம் போட்டோ சூட்டில் கலந்துகொண்டார்.
‘லீலா: தி டிவைன் இல்யூஷன் ஆஃப் லவ்’ என்ற தலைப்பில் வெளியான இந்த புகைப்படங்கள் பகவான் கிருஷ்ணருக்கும் ராதாவுக்கும் இடையிலான அன்பின் வெவ்வேறு நிலைகளைக் காட்டியது.
இதில் ராதையாக நடிகர் தமன்னா நடித்திருந்தார். இந்த புகைப்படங்களை கடந்த சில நாட்களுக்கு முன் தமன்னா மற்றும் கரண் தொரானி இருவரும் தங்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தனர்.
இந்தப் படங்கள் சிலரை மெய்சிலிர்க்க வைத்தாலும், மறுபுறம், சமூக ஊடகங்களில் ஒரு பிரிவினர் நடிகை தமன்னாவுக்கு எதிராக பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
ராதேவை தவறாக சித்தரிப்பதாக நெட்டிசன்கள் குற்றம் சாட்டினர். ராதா மற்றும் பகவான் கிருஷ்ணரின் தூய்மையான உறவை தவறாக சித்தரிப்பதாக கடும் விமர்சனங்கள் எழுந்தது.
நாளுக்கு நாள் விமர்சனங்கள் வலுத்ததை அடுத்து அந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தற்போது தங்கள் சமூக வலைதள பக்கங்களில் இருந்து அவர்கள் நீக்கியுள்ளனர்.