Racist ,   Poles ,  attacked ,  London,  லண்டன், போலந்து நாட்டினர், இனவெறி, தாக்குதல்
லண்டன்:
ண்ட‌னில் இர‌ண்டு போல‌ந்து நாட்ட‌வ‌ர்க‌ள், ஆங்கிலேய‌ இன‌வெறிய‌ர்க‌ளினால் கடுமையாக‌ தாக்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர்.
பிரிட்டனில் கடந்த சில ஆண்டுகளாகவே இனவெறி தலைதூக்கி வருகிறது. வெள்ளையினத்தவர்களில் சிலர், “வெளிநாட்டிலிருந்து இங்கிலாந்து வந்து குடியேறியவர்களால்தான் பூர்வகுடிமக்களாகிய வெள்ளையர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது சிரமமாகிவிட்டது” என்று பிரச்சாரம் செய்வதுடன், பிறநாட்டினரை தாக்கவும் செய்தார்கள்.
சமீபத்தில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் பிரிய வேண்டுமா என்பது குறித்த வாக்கெடுப்பில் பிரிய வேண்டும் என்று முடிவானதைத் தொடர்ந்து இந்த இனவெறி அதிகரித்துள்ளது.
13512147_1217183218292280_5113959644620878300_n
பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் நீடிக்கவேண்டும் என்று குரல் கொடுத்ததால்,  தொழிலாளர் கட்சியின் பெண் எம்.பி. ஜோ காக்ஸ்  ஆங்கிலேயே இனவெறியனால்  பட்டப்பகலில் கத்தியால் குத்தப்பட்டும், துப்பாக்கியால் சுட்டப்பட்டும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.
மேலும், பிரி்ட்டனில் வாழும் வெளிநாட்ட‌வர்க‌ள் பொது இட‌ங்க‌ளில் த‌மது தாய்மொழியில் பேசினால், ஆங்கிலேய இனவெறியர்களால் எச்சரிக்கப்பட்டனர். சில இடங்களில் தாக்குதல்களும் நடந்தன.
ஹண்டிங்டன் பகுதியில் வசிக்கும் போலந்து நாட்டைச் சேர்ந்தவர்களின் வீட்டுத் தபால் பெட்டிகளில், “போலந்து புழுக்கள் தேவையில்லை” என்று எழுதப்பட்டிருந்த அட்டைகள் போடப்பட்டன. இதே கருத்துடைய போஸ்டர்கள் சில பகுதிகளில் ஒட்டப்பட்டன.
இதனால் போலந்து மக்கள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தினார்கள். இதையடுத்து  பிரிட்டனுக்கான போலந்து நாட்டின் தூதர், “இது போன்ற இனவெறி செயல்பாடுகளை அரசு கண்டிக்க வேண்டும்” என்று வேண்டுகோள்வைத்தார்.  இதையடுத்து போலந்து மக்களுக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டியவர்களை, பிரிட்டிஷ் காவல்துறையினர் கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று,  லண்ட‌னில் இர‌ண்டு போல‌ந்து நாட்ட‌வ‌ர்க‌ள், ஆங்கிலேய‌ இன‌வெறிய‌ர்க‌ளினால் கடுமையாக‌ தாக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். இதனால் போலந்து நாட்டினர் மட்டுமின்றி இதநாட்டிலிருந்து சென்று பிரிட்டனில் வாழ்வோர் அனைவருமே அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.