தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரானாவின் கோர தாண்டவம் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் பலவித கட்டுப்பாடு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் நடிகை ராதிகா சரத்குமார், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், பாதுகாப்பாக இருங்கள், தேவைப்பட்டால் மட்டுமே வெளியே செல்லுங்கள். வைரஸ் அழிவை உருவாக்கி அதை வேகமாக உருவாக்குகிறது. தயவுசெய்து உங்கள் அன்புக்குரியவர்களையும் உங்களையும் கவனித்துக் கொள்ளுங்கள், உங்களை உயிரைக் காப்பாற்றுங்கள் என்று உருக்கமாக பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

https://www.instagram.com/p/COFhKK1DR4K/

அதே போல் நடிகை நதியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொரோனா ஊரடங்கை குறித்து, ‘நீங்கள் வீட்டில் முடங்கிப் போய்விட்டதாக நினைக்காதீர்கள், நீங்கள் வீட்டில் பத்திரமாக இருக்கிறீர்கள் என்பது போல நினைத்துப் பாருங்கள’ என தனது ரசிர்களுக்கு அறிவுரை கொடுத்து இருக்கிறார். நடிகை நதியாவின் இந்தப் பதிவிற்கு ரசிகர்கள் பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.