டில்லி
ஊழல் தடுப்புத் துறை தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் மீதான ரூ.70000 கோடியிலான ஊழல் வழக்கில் அவர் குறமற்றவர் எனத் தெரிவித்து அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது
மகாராஷ்டிர மாநிலத்தில் யாரும் எதிர்பாராத வகையில் பாஜகவின தேவேந்திர ஃபட்நாவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவி ஏற்றுள்ளனர். இன்று தேவேந்திர ஃபட்நாவிஸ் முதல்வர் பொறுப்பு ஏற்றுள்ள நிலையில் அஜித் பவார் இன்னும் பொறுப்பு ஏற்கவில்லை.
இந்த புதிய மகாராஷ்டிர அரசை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு வர உள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் மீது முந்தைய பாஜக அரசு ஒரு ஊழல் வழக்கை தொடர்ந்துள்ளது. இந்த ரூ.70000 கோடி நீர்ப்பாசன திட்ட வழக்கில் சிக்கியுள்ள அஜித் பவாரை விடுவித்து இன்று ஊழல் தடுப்புத் துறை ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பின்படி அஜித் பவார் மீதான இந்த ரூ.70000 கோடி நீர்ப்பாசன திட்ட ஊழல் வழக்கில் எந்த ஆதாரமும் இல்லை எனவும் அவர் குற்றமற்றவர் எனவும் ஊழல் தடுப்புத் துறை அறிவித்துள்ளது. அதை அடுத்து இந்த வழக்கு இன்று முடித்து வைக்கப்பட்டுள்ளது.