யாழ்ப்பாணம்

லங்கையின் மூத்த அரசியல் தலைவரான சம்பந்தன் இலங்கையில் உள்ள தமிழ் அரசியலை சீரமைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளதாக ஆங்கில நாளிதழ் “தி இந்து” தெரிவித்துள்ளது.

அந்த செய்தியின் விவரம் பின் வருமாறு :

கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடந்த இலங்கையின் உள்ளாட்சி தேர்தலில் இருந்தே இலங்கைத் தமிழ் மூத்த அரசியல்வாதியான சம்பந்தன் இலங்கையின் வடக்குப் பகுதிக்கான தேர்தல் வேலைகளில் இறங்கி உள்ளார்.   அவர்  தற்போது இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அமைப்பாளர் செல்வநாயகம் பின்னணியில் தான் இருப்பது போல ஒரு பேனர் வெளியிட்டுள்ளார்.     அவர் ”தற்போது ஒற்றுமை என்னும் ஒரே ஆயுதம் மட்டுமே நம்மிடம் உள்ளது”  என அந்த பேனரில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வடக்குப் பிராந்தியத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி பல இடங்களில் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது.   இதன் மூலம் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி,   அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் ஆதரவு அந்தக் கட்சிக்கு கிடைத்துள்ளது தெளிவாகிறது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஏற்கனவே இங்கு குறிப்பாக ஒடுக்கப்பட்ட இனத்தவரிடம் அதிக ஆதரவுடன் உள்ளது.    இலங்கை தமிழ் அரசுக் கட்சி தமிழ் தீவிரவாத அமைப்புடன் நட்புடன் இருந்ததாக கூறப்பட்ட போதிலும்,  பெரும்பான்மையான உயர்ந்த சாதி இனத்தவரின் ஆதரவுக் கட்சி எனவே பெயர் பெற்றுள்ளது.     அதே நேரத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மகிந்தா ராஜபக்சேவுடன் நேரடியாக கூட்டணி வைத்திருந்ததால்  தமிழ் மக்களிடையே நம்பிக்கையை இழந்துள்ளது.

இந்நிலையில் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் இணைக்க 85 வயதான மூத்த அரசியல் வாதியான சம்பந்தன் முயன்று வருகிறார்.  சமீபத்தில் அவர் யாழ்ப்பாணம் சங்கிலியன் தோப்பில் நடந்த பேரணியின் போது தனது உரையில், “ஓட்டப்பந்தயம் என்றால் ஒருவரை ஒருவர் தோற்கடிக்க ஓடலாம்.  ஆனால் இதுவே போர் என்றால் வேறு விதமாக எதிர்கொள்ள வேண்டி உள்ளது.   முன்னால் நடப்பதையும்,  பின்னால் நடக்க உள்ளதையும் சிந்தித்து ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டி உள்ளது.   தமிழர்களாகிய நாம் ஒற்றுமையின்மையால் பல வாய்ப்புக்களை பலமுறை இழந்துள்ளோம்.   இன்னொரு முறை அது நிகழக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

Thanx to THE HINDU