
கேப்டவுன்: மூன்றுவித கிரிக்கெட் போட்டிகளுக்குமான தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் குவின்டன் டி காக்.
தற்போது 28 வயதாகும் டி காக், முன்னதாக, ஒருநாள் & டி-20 அணியின் கேப்டனாக மட்டும் நியமனம் செய்யப்பட்டார். ஆனால், பணிச்சுமை அதிகரிக்கும் என்ற காரணத்தால், டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக நியமனம் செய்யப்படவில்லை.
ஆனால், தென்னாப்பிரிக்க அணிக்கு புதிய தேர்வுக்குழு தலைவராக விக்டர் பிட்சங் பதவியேற்றுள்ள நிலையில், டெஸ்ட் அணிக்கும், குவின்டன் டி காக்கையே கேப்டனாக நியமனம் செய்துள்ளார்.
“தென்னாப்பிரிக்க அணிக்குள் ஒரு தொடர்ச்சியான செயல்பாட்டை கொண்டுவரும் வகையில், டி காக்கையே மூன்றுவித போட்டிகளுக்கும் கேப்டனாக நியமித்துள்ளோம். இந்த முடிவு அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
இந்த முடிவில் குவின்டன் டி காக்கிற்கும் சம்மதமே. வரும் நாட்களில், அனைவரும் அவருக்கு ஆதரவாக இருப்போம்” என்றுள்ளார் விக்டர்.
[youtube-feed feed=1]