வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இந்திய மல்யுத்த வீரர் வினேஷ் போகத் தான் பங்கேற்க இருக்கும் 50 கிலோ எடை பிரிவை விட 100 கிராம் கூடுதல் எடை இருந்ததாகக் கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இறுதிப் போட்டி இன்று நடைபெறுவதாக இருந்த நேரத்தில் இந்த அறிவிப்பு இந்தியாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

போட்டிக்கு முன்னர் எடையை பரிசோதித்த போட்டி அமைப்பாளர்கள் வினேஷ் போகத் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் எடை இருப்பதாகக் கூறப்பட்டது.

100 கிராம் எடையை குறைக்க சிறிது கால அவகாசம் அளிக்குமாறு இந்திய அதிகாரிகள் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

தவிர, பாரிஸ் ஒலிம்பிக் 50 கிலோ மல்யுத்த இறுதிப் போட்டியில் விளையாடும் தகுதியை வினேஷ் போகத் இழந்ததாக சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் அறிவித்தது.

இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் பிற்பகல் 3 மணிக்கு இதுகுறித்து விளக்கம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மல்யுத்த வீரர் வினேஷ் போகத் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் தகுதியை இழந்தார்… எடை பிரிவை விட கூடுதல் எடை…