ண்டன்

ங்கிலாந்து அரசி எலிசபெத் இஸ்லாமிய மதத்தை உருவாக்கிய முகமது நபியின் வம்சாவழியை சேர்ந்தவர் என ஒரு செய்தித் தாள் தகவல் வெளியிட்டுள்ளது.

”டெய்லி மெயில்’ என்னும் செய்தித் தாள் சமீபத்தில் ஒரு புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.   அதில், “இங்கிலாந்து நாட்டு ராணி எலிசபெத்தின் வம்சாவழியினரை சமீபத்தில் ஆராய்ந்தோம்.    இந்த ஆய்வில் அரச வம்சத்தின் 43 தலைமுறைகளை ஆராய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.    அப்படி ஆராயும் போது ஒரு விசித்திரமான உண்மை தெரிய வந்துள்ளது.

இங்கிலாந்து அரச குடும்பம் முழுக்க முழுக்க கிறித்துவ மதக் குடும்பம் என்பது தெரிந்ததே.   ஆனால் இந்த தலைமுறைகளை ஆராயும் போது 43 தலைமுறைகளுக்கு முன்பு இஸ்லாமிய மதத்தை உருவாக்கிய முகமது நபியும் இதே வம்சாவழியினர் என்பது தெரிய வந்துள்ளது.   அதாவது முகமது நபியின் வம்சாவழியினரில் வந்தவர் இங்கிலாந்து ராணி எலிசபெத் என்பது தெரியவந்துள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு அரண்மனை தர்ப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் தெரிவிக்கவில்லை.    முன்பு மார்கரெட் தாட்சர் பிரதமராக இருந்த போது இதே போல அவருக்கு ஒரு கடிதம் எகிப்து நாட்டு இஸ்லாமிய அறிஞர் ஒருவரால் அனுப்பப் பட்டுள்ளது.  அந்த கடிதத்தில், “முகமது நபியின் வம்சா வழியினரான சைதா என்னும் இளவரசி 11ஆம் நூற்றாண்டில் கிறித்துவராக மதம் மாறினார்.  அவருடைய மகன் வழியில் வந்தவர்கள் ஏர்ல் ஆஃப் கேம்பிரிட்ஜ் இளவரசியை மணம் புரிந்தனர்.   அந்த வம்சத்தில் பிறந்தவர் ராணி எலிசபெத்.” என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.