லண்டன்:
ஜி7 மாநாட்டு நிகழ்வில் பிரிட்டன் நாட்டில் அரச குடும்பத்தை சார்ந்த 95 வயதான மகாராணி இரண்டாம் எலிசபெத் வாள் ஏந்தி கேக் வெட்டிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. பிரிட்டனில் உள்ள கார்ன்வால் நகரில் ஜி7 மாநாடு நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்வின் ஒருபகுதியாக நடைபெற்ற கொண்டாட்டதில் மகாராணி எலிசபத் கேக் வெட்டியுள்ளார். வழக்கத்துக்கு மாறாக வாள் கொண்டு கேக்கை வெட்டியுள்ளார். ராணி வாள் கொண்டு வெட்ட முயன்ற போது கத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “இது கொஞ்சம் வித்தியாசமானது” என ராணி தெரிவித்துள்ளார். அதை கேட்டு அங்கு குழுமியிருந்த பலரும் சிரித்து மகிழ்கின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் அவரது பிறந்தநாளை கொண்டாட ராணி தவறிய நிலையில் இந்த நிகழ்வை ராணியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஒன்றாகவே கருதுகின்றனர் பிரிட்டன் மக்கள். கனடா, பிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.