லண்டன்:
ராணி இரண்டாம் எலிசபெத் பால்மோரலில் காலமானார். அவருக்கு வயது 96.

ராணி இரண்டாம் எலிசபெத் இறந்துவிட்டார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியது.

இதுகுறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கையில், “ராணி இன்று பிற்பகல் பால்மோரலில் காலமானார். ராஜாவும் ராணியும், இன்று மாலை பால்மோரலில் தங்குவார்கள், நாளை லண்டனுக்குத் திரும்புவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.