இங்கிலாந்து நாட்டின் மகாராணி எலிசபெத் காலமானார்.

1952 ம் ஆண்டு இங்கிலாந்து மகாராணியாக பதவியேற்ற எலிசபெத் தனது 96 வது வயதில் இன்று காலமானார்.

70 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கிலாந்தில் ஆட்சி செய்து வந்த அவர் பல்வேறு சீர்திருத்தங்களை அமல்படுத்தினார்.

கடந்த சில நாட்களாக ஸ்காட்டிஷ் பகுதியில் உள்ள பால்மோரல் அரண்மனையில் தங்கி இருந்த ராணி எலிசபெத்துக்கு இன்று அவரது உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பால்மோரல் அரண்மனைக்கு விரைந்தனர்.

மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த அவர் இன்றிரவு உயிரிழந்தார்.

ராணியின் மறைவை அடுத்து அவரது மகன் பிரின்ஸ் சார்லஸ் அரச பொறுப்பை ஏற்றுள்ளார்.

பிரின்ஸ் சார்லஸ் பிரிட்டன் மற்றும் 14 காமென்வெல்த் நாடுகளின் தலைவராக இனி செயல்படுவார்.