தோகா: 

த்தார் நாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்க வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் நடைமுறைக்கு ஒத்து வராது என்று கத்தார் வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது.

கத்தார் நாடு பயங்கரவாதிகளுக்கு உதவி செய்ததாகவும், ஈரானுடன் உறவு வைத்துள்ளதாகவும் கூறி, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன், எகிப்து ஆகிய  நாடுகள் கத்தார் நாட்டுடன் ஆன தூதரக உறவை கடந்த மாதம் முறித்துக்கொண்டன.

மேலும் கத்தார் விமானங்கள் தங்களது நாடுகளின்மீது பறக்கவும் தடை விதித்தது. இதன் காரண மாக கத்தார் பொருளாதார நெருக்கடிக்கு ஆளானது. அங்கு வேலை செய்து வந்த வெளி நாட்டினர் தங்களது நாடுகளுக்கு திரும்பினர்.

கத்தார் பிரச்சினைக்கு  தீர்வு காணும் முயற்சியில் குவைத் மன்னர் ஈடுபட்டு வருகிறதார். அவர் மூலம், வளைகுடா நாடுகள் கத்தாருக்கு 13 கோரிக்கைகளை முன்வைத்தன.  மேலும் இதுகுறித்து 10 நாட்களுக்குள் பதில் தெரிவிக்க வேண்டும் என்றும் கத்தாருக்கு நிபந்தனை விதித்தன.

ஆனால், கத்தார் இந்த கோரிக்கைகளுக்கு பதில் அளிக்கவில்லை. இந்நிலையில், தற்போது கத்தார் வெளியுறத்துறை இந்த கோரிக்கை குறித்து கருத்து தெரிவித்து உள்ளது.

அதில், கத்தாரின் நட்பு நாடுகளின் கோரிக்கை நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்றாக இருக்கிறது. அதேபோல் நடவடிக்கை எடுக்க முடியாத ஒன்றாகவும் இருப்பதாகவும், இந்த கோரிக்கைகள் அனைத்தும், பயங்கரவாதம் தொடர்பானது அல்ல. பேச்சு சுதந்திரத்துக்கு எதிராக இருக்கிறது என்று  கத்தாரின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் மொகமது பின் அப்துல்ரகுமான் அல்-தானி கூறியிருக்கிறார்.

இதைத்தொடர்ந்து கத்தார் பிரச்சினை மேலும் சிக்கலடைந்துள்ளது.