டோராடூன்: உத்தரகாண்ட் மாநில புதிய முதல்வராகிறார் புஷ்கர் சிங் தாமி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். பாஜக ஆட்சி செய்யும் இந்த மாநிலத்தில், கடந்த 4 மாதத்தில் 3வது முறையாக முதல்வர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு துக்ளக் தர்பார் ஆட்சி நடைபெற்று வருகிறது. இது கேலிக்குரியாதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2017ம் ஆண்டு உத்தரகண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் நடந்தது. இதில் பா.ஜ., வெற்றி பெற்று, முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் பதவியேற்றார். ஆனால், தொடர்ந்து ஏற்பட்டு விந்த உட்கட்சி பூசலால், அவர் 2021 மார்ச் மாதம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய முதல்வரக லோக்சபா எம்.பி.,யான தீரத் சிங் ராவத், முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். எம்.பி.யான அவர், 6 மாதத்திற்கள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், அவருக்கு எந்தவொரு பாஜக எம்எல்ஏவும் தொகுதியை விட்டுக்கொடுக்க மறுத்ததும், கொரோனா பரவல் காரணமாக இடைத்தேர்தல் நடத்துவதில் சிக்கலும் எழுந்ததால், அவரது முதல்வர் பதவி கேள்விக்குறியானது.
உத்தரகாண்டில், அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், உள்கட்சி பூசலில் தேர்தலை சந்திப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் பாஜக தலைமை அவரை டெல்லி அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. இதையடுத்து, தீரத் சிங் ராவத் நேற்று முன்தினம் அவர் பதவி விலகினார்.
இதைத்தொடர்ந்து, புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் டேராடூனில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கதிமா தொகுதி எம்.எல்.ஏ.,வான புஷ்கர் சிங் தாமி (45), புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். கதிமா தொகுதியில் இருந்து தொடர்ச்சியாக இரு முறை தேர்வு செய்யப்பட்ட புஷ்கர் சிங், பா.ஜ.,வின் இளைஞர் அணி தலைவராகவும் இருந்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த 4 மாதங்களில், 3வது முதல்வர் பதவியேற்க உள்ளது கேலிக்குரியதாக விமர்சிக்கப்படுகிறது. துக்ளக் தர்பாரை போல, முதல்வர் மாற்றம் செய்யப்படுவதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.