டெல்லி: தேஜஸ் விமானங்களை கொள்முதல் செய்வதால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய விமான படைக்கு ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பில் 83 இலகு ரக தேஜஸ் போர் விமானங்களை கொள்முதல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விமான படை வீரா்கள் பயிற்சி மேற்கொள்வதற்காகவே 10 போர் விமானங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
இந் நிலையில் தேஜஸ் விமானங்கள் கொள்முதலால் நாட்டில் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: தற்சார்பு திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி கொள்கையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பில் 83 இலகு ரக தேஜஸ் போர் விமானங்களைக் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்தது வளர்ச்சியை நோக்கிய மிக முக்கிய அடியாக உள்ளது.
இதன் மூலம் 50 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். சிறு குறு தொழில்கள் உள்பட டாடா, எல் அண்ட் டி போன்ற போன்ற பெரு நிறுவனங்களும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் உற்பத்தியை அதிகரிக்கும் என்று கூறினார்.