மோகா, பஞ்சாப்
மனநோயாளி ஒருவர் பலதரப்பட்ட உலோக பொருட்களை விழுக்கி உள்ளது பஞ்சாபில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பல மாதங்களாகப் பஞ்சாப் மாநிலம் மோகா நகரில் வசிக்கும் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். அவர் இதற்காக பல மருத்துவர்களிடம் தொடர்ந்து சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை.
கடந்த இரு தினங்களுக்கு முன், கடுமையான காய்ச்சல், வயிற்று வலியுடன் குமட்டலும் இருந்ததால் அவரால் தூங்க முடியவில்லை. எனவே மெடிசிட்டி மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அவரது வயிற்றுப் பகுதியை ஊடுகதிர் மற்றும் ஸ்கேன் பரிசோதனைகள் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில் அவரது வயிற்றில் பல உலோக பொருட்கள் இருப்பது தெரிந்தது. இது அந்த பகுதியில் பாரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த நோயாளியின் குடும்பத்தினர் நோயாளி மனநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார் அவர் எப்படி. இத்தனை பொருட்களையும் விழுங்கினார் என்பது அவரது குடும்பத்தினருக்கே தெரியவில்லை.
அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் வயிற்றுக்குள் இருந்த உலோகப் பொருட்களை வெற்றிகரமாக வெளியில் எடுத்தனர். அந்த பொருட்கள் நீண்ட காலமாக வயிற்றில் தங்கியதால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உடல்நிலை சீரடையாததால் அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.