ஜலந்தர்
இந்திரஜித் சிங்க் என்னும் பஞ்சாப் போலீஸ் இன்ஸ்பெக்டர் போதை மருந்து வைத்திருந்தாக கூறி சிறப்புக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜலந்தரில் சமீபத்தில் ப்ரின்ஸ் என்னும் தாதா ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்றது.
அந்த விசாரணையில் கிடைத்த தகவலின் படி பஞ்சாபில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் இந்திரஜித் சிங்க் எனபவரின் வீட்டில் சோதனை செய்யப்பட்டது/
இந்திரஜித் சிங்கின் ஜலந்தர், பக்வாரா ஆகிய இரு இடங்களில் உள்ள இல்லங்களிலும் 4 கிலோ ஹெராயின் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றப்பட்ட பொருட்கள் :
ரூ 20 கோடி மதிப்புள்ள போதை பொருள் 4 கிலோ ஹெராயின்
இத்தாலிய தயாரிப்பான 9 எம் எம் துப்பாக்கி
38 போர் ரிவால்வர் துப்பாக்கி
அந்த துப்பாக்கிக்கான 383 குண்டுகள்
ஏ கே 47 துப்பாக்கி
அதற்கான 115 குண்டுகள்
ரூ. 16.5 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள்
வெளிநாட்டுப்பணம் 3500 யூரோக்கள்
ஒரு டொயோட்டா இன்னோவா வாகனம்
இந்த பணம் எல்லாம் கணக்கில் காட்டப்படாத பணம்
துப்பாக்கிகள் எதற்கும் உரிமம் பெறப்படவில்லை.
இதை தொடர்ந்து இந்திரஜீத் சிங்க் கைது செய்யப்பட்டுள்ளார்
மேலும் விசாரணை நடக்கிறது.
கைது செய்யப்பட்ட இந்திரஜித் சிங்க் முன்பு பல தாதாக்களையும் கடத்தல் காரர்களையும் கைது செய்தவர் என்பதும் இதனால் பல கடத்தல் காரர்கள் இவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.