ண்டிகர்

ஞ்சாப் மாநிலத்தில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு 15 பேர் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுள்ளனர்.

அண்மையில் பஞ்சாப் முதல்வர் பதவியிலிருந்து  அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். அவருக்குப் பதிலாக சரண்ஜித் சிங் சன்னி முதல்வராகப் பதவி ஏற்றார்.  அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய முடிவு எடுத்தார்.  அதன்படி இன்று 15 பேர்  அமைச்சர்களாகப் பதவி ஏற்றனர்.

அவர்களுக்கு பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.  அவர்கள் பிரம் மொகிந்திரா, மன்பிரீத் சிங் பாதல், ராஜிந்தர் சிங் பஜ்வா, சுக்பிந்தர் சிங் சர்க்காரியா, ராணா குர்ஜித் சிங், அருணா சவுத்ரி, ரஜியா சுல்தானா, பாரத் பூஷன், விஜய் இந்தர் சுக்லா, ரந்தீப்ச் இக் நபா, ராஜ்குமார் வெர்கா, சங்கீத் சிங் கில்ஜியான், பர்கத் சிங், ராஜாவ்ரிங், குக்ரித் சிக் கோட்லி ஆகியோர் ஆவார்கள்.

இவர்களில் பிரம் மொகிந்திரா, பஞ்சாப் காங்கிரசின் மூத்த தலைவர் ஆவார். அமரீந்தர் சிங்கிற்கு முன்னர் கட்சியில் இணைந்தவர். அமரீந்தர் அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். தவிர நபா, வெர்கா, கில்ஜியான், பர்கத் சிங், வரீங் மற்றும் கோட்லி ஆகியோர் புதிதாக அமைச்சர்களாகப் பதவி ஏற்றுள்ளனர்.