ண்டிகர்

லிம்பிக் போட்டிகளில் பதக்கம் பெற்ற  ஆக்கி அணியின் பஞ்சாப் அணியினருக்கு அம்மாநில அரசு தலா ரூ. 1 கோடி பரிசளிக்க உள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஸ்பெயின் ஆக்கி அணிகல் நேற்று பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் ஆக்கி போட்டியில் அரையிறுதியில் தோல்வி அடைந்ததால் வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில் விளையாடின. போட்டியில் இந்திய அணி ஸ்பெயினை 2-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து 2-வது முறையாக ஆக்கி அணி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

வெண்கல பதக்கம் வென்ற இந்திய ஆடவர் ஆக்கி அணிக்கு பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங் தன்னுடைய எக்ஸ் தளப்பக்கத்தில்,

‘பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஆக்கி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளது. பாரீஸ் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் நான்காவது பதக்கம் வென்றது இந்தியா.

இந்திய ஆக்கி அணிக்கு வாழ்த்துகள்.கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், துணை கேப்டன் ஹர்திக் சிங் உள்பட 10 பஞ்சாப் வீரர்கள் அணியில் இருந்தது எங்களுக்கு மேலும் பெருமை. அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் ஆர்வத்துடன் விளையாடினர். வெற்றி நமதே இந்தியா!

மேலும், எங்கள் விளையாட்டு கொள்கையின்படி வெண்கலம் வென்ற அணியில் அங்கம் வகித்த பஞ்சாப் வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படும்”

என்று பதிந்துள்ளார்.