ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வென்ற வீரர்களை கௌரவிக்கும் விதமாக, அவர்களுக்கு இன்று இரவு விருந்தளிக்கிறார் பஞ்சாப் முதல்வர்.

ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா, வட்டு எறிதலில் பதக்கத்தை தவற விட்ட மன்ப்ரீத் கவுர் மற்றும் வெண்கலம் வென்ற ஹாக்கி அணியின் முக்கிய வீரர்கள் உள்ளிட்ட பலரும் இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் வேளையில், பஞ்சாப் முதல்வரின் ஊடக ஆலோசகர் ரவீன் துக்ரல், இன்று நடக்கும் விருந்து நிகழ்ச்சியில் இடம் பெற இருக்கும், புலாவ், மட்டன் மற்றும் சிக்கன் உணவுவகைகளை பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங் தன் கைப்பட தயாரிக்க இருப்பதாகத் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பஞ்சாப் முதல்வர் சமையலில் ஆர்வம் உள்ளவர் என்பதைக் குறிக்கும் வகையில் அவர் ஏற்கனவே சமையலில் ஈடுபட்ட படம் ஒன்றையும் அதனுடன் இணைத்துள்ளார்.

ஒலிம்பிக் வீரர்களுக்கான பஞ்சாப் முதல்வரின் இந்த விருந்து நிகழ்ச்சி இப்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]