ண்டிகர்

ஞ்சாப் முதல்வர் வீட்டு பயன்பாட்டு மின் கட்டணத்தில் யூனிட் ஒன்றுக்கு ரூ.3 குறைத்து அறிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் மின் கட்டணம் அதிகமாக உள்ளதாக மக்கள் தொடர்ந்து குறை கூறி வருகின்றனர்.  இதையொட்டி அம்மாநில அரசு பல நடவடிக்கைஅக்ள் எடுத்து வருகின்றன.    முதல்கட்டமாக அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கும் ஒப்ந்தத்டை ரத்து செய்து  சூரிய மின்சக்தி போன்றவற்றின் மூலம் மின் உற்பத்தி செய்ய உள்ளது.

இந்நிலையில் தீபாவளிக்கு இரு தினங்கள் முன்பே மக்களுக்குத் தீபாவளி பரிசாக அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி வீட்டு உபயோக மின் கட்டணத்தைக் குறைத்துள்ளார்.  அதன்படி 7 கிலோ வாட் வரை உபயோகிக்கும் வீட்டு மின் கட்டணத்தில் ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் சுமார் 71.75 லட்சம் வாடிக்கையாளர்கள் பயன்பெற உள்ளனர். 

 தற்போது 100 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோருக்கு யூனிட்டுக்கு ரூ.4.19 ஆக இருந்த மின் கட்டணம் தற்போது ரூ.3 குறைந்து ரூ.1.19 ஆகி உள்ளது.  அடுத்ததாக 101-300 யூனிட்டுகள் வரையிலான மின் கட்டணம் ரு.7.01லிருந்து ரூ.4.01 ஆகி உள்ளது.  அதைப் போல் 300 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் போது ரூ.8.76 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.5.76 ஆகக் குறைந்துள்ளது.

தற்போது தலித்துகள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோர் ஆகியோருக்கு அளிக்கப்பட்டு வரும் இலவச மின்சார வசதி தொடர உள்ளது.  அரசு மின் கொள்முதல் விலையைக் குறைத்து அதை பொதுமக்களுக்கு அளிக்க உள்ளது.  இந்த மின் கட்டண குறைப்பினால் அரசுக்கு ரூ.3,316  கோடி வருமான இழ[[[இ ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.