பாட்டியாலா: பஞ்சாப் மாநிலத்தின் டார்ன் டாரன் மாவட்டத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 15 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் 20 பேர் வரை காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீக்கியர்களின் பாரம்பரியத் திருவிழாவையொட்டி நடைபெற்ற நாகர் கிர்டன் எனும் ஊர்வலத்தின்போது இந்த வெடிவிபத்து ஏற்பட்டதாக தகவல்கள் உறுதிபடுத்துகின்றன. பாபா தீப் சிங் என்பவரின் பிறந்தநாளின் பொருட்டு நடைபெற்றதாம் இந்த ஊர்வலம்!
ஊர்வலத்தின்போது சில வெடிப் பொருட்கள் டிராக்டர் டிராலியில் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக பட்டாசு தீப்பொறி ஒன்று வெடி பொருட்கள் வைத்திருத்த டிராலி மீது விழுந்தது.
இதனால் அந்த வெடி பொருட்கள் வெடித்துச் சிதறின. இந்த வெடி விபத்தில் ஊர்வலத்தில் சென்ற 15 பேர் உயிரிழந்தாக கூறப்படுகிறது. இருபதுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.