அமிர்தசரஸ்: சிபிஐ அமைப்புக்கு வழங்கப்பட்டு வந்த பொது ஒப்புதலை பஞ்சாப் அரசு ரத்து செய்துள்ளது.
.காங்கிரஸ் தலைமையிலான அமரீந்தர் சிங் ஆட்சி இதை அறிவித்துள்ளது. இதையடுத்து, பஞ்சாப் மாநிலத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்ட பகுதிகளுக்குள் இனி விசாரணை நடத்த வேண்டும் என்றால், மாநில அரசிடம் சிபிஐ முன் அனுமதி பெற வேண்டும்.
ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மேற்குவங்கம், மகாராஷ்டிரம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களை தொடர்ந்து பஞ்சாப்பும் இப்போது சிபிஐக்கான பொது ஒப்புதலை ரத்து செய்துள்ளது.
பஞ்சாப் அரசானது, வேளாண் சட்டங்களுக்கு எதிராக மத்திய அரசுடன் மோதி வருகிறது. மாநிலத்தின் பல பகுதிகளில் போராட்டங்களும், நடைபெற்றதோடு, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் எதிர்ப்பு போராட்டங்களும் நடத்தப்பட்டன.