புனே: மகாஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ரசாயன ஆலை ஒன்றில் நேற்று இரவில்  ஏற்பட்ட தீவிபத்தில் 15 பெண்கள் உள்பட 18 பேர் கருகி இறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பேரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்திலுள்ள பிராங்குட் பகுதியில்  எஸ்விஎஸ் அக்வா டெக்னாலஜி என்ற பெயரில் ரசாயன உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ரசாசயனம் பேக்கிங் பிரிவில் பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த  ரசாயன ஆலையில்  நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ ரசாயனத்துடன் கலந்து  மளமளவென பரவியதால், அங்கு பணியில் இருந்த பெண் ஊழியர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். அதற்குள்  தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்த முயற்சித்தனர். ஆனால், தீ  ரசாயணங்களில் பரவியதால் தீ கட்டுக்கடங்காமல் கொழுந்து விட்டு எரிந்தது. இதையடுத்து, ஜேசிபி இயந்திரங்களைக்கொண்டு, ஆலையின் சுவரை உடைத்து, உள்ளே சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்றது. 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த பயங்கர தீவிபத்தில், 15 பெண்கள் உட்பட 18 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். ரசாயனத்தோடு, உயிரிழந்தவர்களின் உடல்களும் எரிந்துள்ளதால், அவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு கருகி உள்ளதாக கூறப்படுகிறது. வகையில் தீயில் கருகி இருந்தனர். , தீயில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என கூறியுள்ளார்.

மகாராஷ்டிர அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என துணை முதல்வர் அஜித் பவார் அறிவித்துள்ளார். மேலும் இந்த தீ விபத்து குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்