ஸ்ரீநகர்:

குடியரசு தின விழா சீர்குலைக்க திட்டமிட்ட 3 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

நாடு முழுவதும் இன்று 71வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னதாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று கிடைக்கப்பெற்ற ரகசியத் தகவலைத் தொடர்ந்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  ஜம்மு காஷ்மீரில் அவந்திபோராவில்  பகுதியில் தாக்குதல்  நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் கிடைத்தன.  இதையடுத்து பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை ராணுவத்தினரும், காவல்துறையினரும் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர்.

இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையைத் தொடர்ந்து,  ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகள்  லெத்போரா குண்டு வெடிப்பு மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட தொடர் பயங்கரவாத குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்றும்,  டிராலின் புர்ஹான் ஷேக், மூசா @ அபு உஸ்மான் மற்றும் ஒரு உயர்மட்ட ஜெ.எம் தளபதி காரி யாசிர் ஆகியோர் கொல்லப்பட்டதாகவும்,  காரி யாசிர் என்ற பயங்கரவைதி, 40 ராணுவ வீரர்களைக் கொன்ற புல்வாமா தாக்குதலில் தொடர்புடையவன் என அடையாளம் காணப்பட்டனர் என்றும் காவல்துறையினர் அறிவித்து உள்ளனர்.