அடிலெய்டு: முதல் டெஸ்ட்டின் முதல்நாள் ஆட்டத்தில், தனது வியூகம் எந்தவகையிலும் தவறாக அமையவில்லை என்று மிக மெதுவாக ஆடிய புஜாரா நியாயம் கற்பித்துள்ளார்.

இன்று, அவர் தனது முதல் பவுண்டரியை அடிக்க 148 பந்துகளை எடுத்துக்கொண்டார். அந்தளவிற்கு மிக மெதுவாக ஆடினார். அவர், 160 பந்துகளில் 43 ரன்களை எடுத்து அவுட்டானார்.

அவர் தனது ஆட்டம் குறித்து கூறியுள்ளதாவது, “பிட்ச்சில் பந்து ஸ்விங் ஆகும்போது ஷாட் அடிக்க முயற்சிக்கக்கூடாது. பிட்ச் தட்டையாக இருக்கும்போது ஆக்ரோஷமாக ஆடலாம்.

பிட்ச், பந்துவீச்சாளர்களுக்கு சாதகமானதாக இருக்கும்பட்சத்தில், விக்கெட்டை தக்கவைப்பதுதான் முக்கியம். கேட்ச் அல்லது பெளல்டு ஆகிவிடக்கூடாது” என்றுள்ளார் அவர்.

இன்றைய ஆட்டத்தில், இந்திய அணி, முதல் செஷனில் 41 ரன்களையும், இரண்டாவது செஷனில் 66 ரன்களையும் எடுத்தது.