புதுடெல்லி: இந்தியாவில் எழுந்த பல்வேறான புகார்கள் மற்றும் குஜராத் மாநிலத்தில் விதிக்கப்பட்ட தடை போன்ற காரணங்களால், PUGB மொபைல் விளையாட்டிற்கான காலஅளவு 6 மணிநேரமாக சுருக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்தத் தடை இந்தியாவில் மட்டும்தான் என்றும், உலகின் மற்ற பகுதிகளில் எந்த மாற்றமும் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை குறித்து டென்சன்ட் கேம்ஸ் மற்றும் PUGB கார்பரேஷனிடம் விளக்கம் கேட்க முயன்றபோது பதில் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த தடையின்படி, விளையாட்டின் முதல் 2 மணிநேரங்கள் முடிந்தவுடன், ஒரு எச்சரிக்கை வரும்.
பின்னர், 4 மணிநேரங்கள் முடிந்தவுடன், வரையறுக்கப்பட்ட எல்லையை தொடப் போகிறீர்கள் என்பதாக தகவல் வரும். மொத்தமாக 6 மணிநேரங்களுக்குப் பிறகு, ‘ஹெல்த் ரிமைன்டர்’ என லேபிளிடப்பட்ட ஒரு ‘பாப்-அப்’ பாக்ஸ் காட்சிதரும்.
பின்னர் இறுதியாக, 24 மணிநேரம் நிறைவடைந்த பின்னர், மீண்டும் விளையாட வருமாறு தெரிவிக்கப்படும்.
– மதுரை மாயாண்டி