புதுச்சேரி

ன்று புதுச்சேரியில் மேலும் ஒருவர் கொரோனாவால் மரணம் அடைந்ததால் மொத்த  எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தைப் போல் அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் கொரோனா  பாதிப்பு அதிகமாக இருந்தது.

அதையொட்டி மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

தற்போது ஊரடங்கு விதிகள் தளவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

புதுச்சேரியில் இன்று 6 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 163 ஆகி உள்ளது.

இன்று முதலியார்பேட்டையை சேர்ந்த 82 வயது முதியவர் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் உயிர் இழந்துள்ளார்.

அந்த முதியவரின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.