புதுச்சேரி

புதுச்சேரியில் புதிய  ஊரடங்கு விதிகளை முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா கட்டுப்பாட்டுக்காக ஜூன் 30 வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.   மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அந்தந்த இடங்களின் பாதிப்பைப் பொறுத்து புதிய ஊரடங்கு விதிகளை நிர்ணயம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.   இதன் அடிப்படையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி புதிய ஊரடங்கு விதிகளை அறிவித்துள்ளார்.

அவை பின்வருமாறு :

  • வணிக வளாகங்கள் வரும் ஜூன் 8 முதல் இயங்கலாம்
  • உணவகங்களில் வரும ஜூன் 8 முதல் அமர்ந்து சாப்பிடலாம்
  • அனைத்து ஓட்டல்கள் மற்றும் நிறுவனங்கள் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்
  • புதுச்சேரி, கடற்கரை மற்றும் பாரதி பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும்
  • மத வழிபாட்டுத் தலங்கள் மத்திய அரசின் வழிகாட்டுதலுடன் ஜூன் 8 முதல் திறக்கப்படும்
  • திரையரங்குகள், பார்கள், நீச்சல் குளங்கள் திறக்க அனுமதி இல்லை.

தமிழக பேருந்துகளை புதுச்சேரி வழியாக இயக்க அனுமதிப்பது குறித்து தமிழக அரசுடன் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு அறிவிக்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.