புதுச்சேரி:
புதுச்சேரியில் நாளை மறுநாள் பதவியேற்க உள்ள அமைச்சர்களின் பெயர் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து கூறப்படுவதாவது: புதுச்சேரி மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து என்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரங்கசாமி முதல்வராக பதவியேற்றார். தொடர்ந்து ரங்கசாமிக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக அமைச்சர்களாக யாரும் பதவியேற்கவில்லை. மேலும் 50 நாட்கள் கடந்த பின்னரும் அமைச்சரவையில் யார் யார் இடம் பெறுவது என்ற அரசியல் குழப்பநிலை நீடித்து வந்தது.மேலும் தங்களது ஆதரவு எம்.எல்.ஏ.,வுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என பா.ஜ., அலுவலகத்தில் பேனர் களை கிழித்து எறிந்த சம்பவம் போன்றவை நடந்தேறின.

இந்நிலையில் ஒருவழியாக குழப்பம் முடிவுக்கு வந்ததை அடுத்து நாளை மறுநாள் அமைச்சர்கள்பதவியேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இதனையடுத்து யார் யார் அமைச்சர்களாகின்றனர் என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

என் ஆர் காங்கிரஸ் சார்பில் தேனி ஜெயக்குமார் சந்திரா பிரியங்கா, லட்சுமிநாராயணன், பாஜ.,சார்பில் நமச்சிவாயம், ஜாய் சரவணன் ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.