untitled-5
புதுச்சேரி:
பிரான்ஸ் நாட்டின் ஆதிக்‍கத்தில் இருந்து புதுச்சேரி விடுவிக்‍கப்பட்ட  விடுதலை தினம் இன்று கொண்டாட்டப்பட்டது. அங்குள்ள நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதிக்‍கு இடைத்தேர்தல் நடைபெறுவதால், இவ்விழா மிகவும் எளிமையாக நடைபெற்றது.
300 ஆண்டுகளுக்‍கும் மேலாக பிரான்ஸ் நாட்டின் ஆதிக்‍கத்தில் இருந்து வந்த புதுச்சேரி.  கடந்த 1954-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி விடுதலை பெற்றது.  ஆனாலும் இந்தியா சுதந்திரமடைந்த ஆகஸ்ட் 15ம் தேதியே அங்கு கொண்டாடப்பட்டு வந்தது.
பிரான்ஸ் அரசை எதிர்த்து புதுச்சேரி விடுதலைக்காக போராடிய தியாகிகள்,  விடுதலை தினத்தை கொண்டாட வலியுறுத்தி,  போராடினர்.  இதையடுத்து  , கடந்த 2014-ம் ஆண்டு முதல் புதுச்சேரியில் “விடுதலை நாள்” கொண்டாடப்படுகிறது.
நெல்லித்தோப்பு சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தலை் நடைபெற இருப்பதால், புதுவை கடற்கரை சாலையில் மிகவும் எளிமையான முறையில் விடுதலை தினம் கொண்டாடப்பட்டது.
முதல்வர் நாராயணசாமி  தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.  தொடர்ந்து போலீசார் மற்றும் மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு   மரியாதையை  ஏற்று கொண்டார்.
இந்நிகழ்ச்சியில்,   அமைச்சர்கள் ஏ.நமச்சிவாயம், கந்தசாமி, அரசுக் கொறடா ஆர்கே.அனந்தராமன், எம்.எல்.ஏக்கள் தீப்பாயந்தான், தனபால், விஜயவேணி, தலைமைச் செயலாளர் மனோஜ்பரிதா மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல், புதுச்சேரி விடுதலை நாள் காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதியிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.