புதுச்சேரி
பதவியை காப்பாற்றிக் கொள்ளப் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பாஜகவிடம் சரணாகதி அடைந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் தற்போது என் ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது, இம்மாநிலத்தில் என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்வராகப் பதவியில் உள்ளார். இவர் தனது கூட்டணிக் கட்சியான பாஜகவின் சொற்படி நடந்து வருவதாக எதிர்க்கட்சியினர் குறை கூறி வருகின்றனர்.
இது குறித்து புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான நாராயணசாமி, “புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் ஆட்சி அமைத்து ஐந்து மாதங்கள் ஆன நிலையில் மக்களுக்கு எவ்வித பயனும் இதுவரை கிடைக்கவில்லை. மத்திய அரசிடம் இருந்து மாநிலத்துக்குத் தேவையான நிதியைக் கூட முதல்வரால் பெற முடியவில்லை.
முதல்வர் ரங்கசாமி எது நடந்தாலும் பரவாயில்லை என்னும் எண்ணத்தில் இருக்கிறார். ரங்கசாமி தனது முதல்வர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள பாஜகவிடம் சரணாகதி அடைந்துள்ளார். புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் விதிமுறைப்படி பாரபட்டமின்றி நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]