சென்னை
மீண்டும் தக்காளி விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தக்காளியின் விலை கடந்த சில நாட்களாக விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே சென்றது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு மலிவு விலையில் சென்னை சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் தக்காளியை விற்பனைக்குக் கொண்டு வந்தது.
தக்காளி வரத்து கோயம்பேடு சந்தைக்குக் குறைந்து கொண்டே வந்ததால் இந்த விலை ஏற்றம் என கூறப்பட்டு வந்தது,. நேற்று தக்காளி வரத்து அதிகமானதால் 40 ரூபாய் குறைந்து கிலோ 130க்கு விற்கப்பட்ட தக்காளி 80, 90 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
சுமார் ஒரு வாரத்திற்குப் பின் தக்காளி விலை குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இன்று மீண்டும் தக்காளி விலை உயர்ந்துள்ளது. நேற்று கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.90க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.30 உயர்ந்து ஒரு கிலோ தக்காளி ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி விலை குறைந்ததால் நேற்று மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் இன்று ஒரே நாளில் மீண்டும் விலை உயர்ந்துள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.