புதுடெல்லி:
எதிர்ப்புகள் காரணமாக நவராத்திரி ஆடை கட்டுப்பாட்டுச் சுற்றறிக்கையை யூனியன் வங்கி திரும்ப பெற்றுள்ளது.
நேற்றைய தினம் யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் பொது மேலாளர், நவராத்திரியின் ஒன்பது நாட்களும் தங்களின் ஊழியர்கள் அனைவரும் ஒன்பது நிற உடைகளில் வர வேண்டுமெனச் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். சுற்றறிக்கையைப் பின்பற்றி உடை அணியாதவர்கள், ரூ.200 அபராதம் செலுத்த வேண்டுமென்றும் அதில் சொல்லப்பட்டிருந்தது. இதை எதிர்த்து கண்டனங்கள் எழுந்து வந்தது.
இந்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து தற்போது அந்த வங்கி தனது அறிக்கையைத் திரும்பப்பெற்றுள்ளது.