புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் நாளை முதல் முழுநேர வகுப்பு நடைபெறும் என்றும் , 9,10,11 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் பொறுப்பு ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டு உள்ளார் இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்ததால் குடியரசுத்தலைவர் ஆட்சி அமலில் உள்ளது. இந்த நிலையில், பொறுப்பு ஆளுநராக உள்ள தமிழிசை பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்
நிறுத்தப்பட்ட .மதிய உணவுத் திட்டத்தை மீண்டும் தொடங்கி 2,400 குழந்தைகள் மதிய உணவு சாப்பிட ஏற்பாடு செய்துள்ளார். மேலும்,. சத்துணவு சாப்பிடும் மாணாக்கர்களுக்கு வாரத்தில் 3 நாள் முட்டை வழங்க வேண்டும், பள்ளிக் குழந்தைகளுக்குக் காலையில் பால் நாள் தோறும் வழங்கப்படும் என்றும் உத்தரவிட்டு உள்ளார்.
பெட்ரோல், டீசல் விலையில் ரூ.1 குறைத்துள்ள நிலையில், தற்போது, மேலும் பல அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். இந்த நிலையில், புதுச்சேரியில் தேர்வில் பழைய முறையே தொடரும், இதில் குழப்பம் இல்லை என தெரிவித்துள்ளவர், புதுச்சேரி, காரைக்காலில் 9, 10, 11-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெரும் என அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, தமிழகத்தில் 9, 10,11-ம் வகுப்புகளுக்கு தேர்வு இல்லாமல் அனைவரும் தேர்ச்சி என்று தெரிவித்துள்ளனர். புதுச்சேரியில் தேர்தலுக்கு பின்னால் தேர்வு தேதி வைக்கலாமா என ஆலோசனை செய்து வருகிறோம். தேர்வு தேதியை மாற்றி அமைக்க உள்ளோம். அதை தற்போது அறிவிக்க முடியாது. தேர்தல் தேதியை மனதில் வைத்து தேர்வு தேதியை மாற்றி வைக்க ஆலோசிக்கிறோம். ஏனென்றால், புதுச்சேரியில் மாணாக்கர்கள் கடந்த ஆண்டு (2020) அக்டோபர் முதல் பள்ளிக்குச் செல்கிறார்கள். அதனால், தேர்தலுக்கு பிறகு தேர்வைப் பிறகு நடத்துவது பற்றி கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்துள்ளோம். தேர்வு தேதியை மாணவர்களுக்கு வசதியாக அறிவிப்போம்.
இது தொடர்பாக பெற்றோர், மாணவர்கள் ஏதும் கோரிக்கை வைப்பார்களா என்று பார்க்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆனால், தமிழகத்தில் 9,10,11ம் வகுப்புகளுக்கு தேர்வுகளின்றி தேர்ச்சி பெற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ள நிலையில், புதுச்சேரியில் தேர்வு என அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி அரசின் பாடத்திட்டம் தமிழகத்தை பின்பற்றியே உள்ளது. மேலும் ஆண்டு தோறும் நடத்தப்படும் பொதுத்தேர்வுகளும், தமிழகத்தையொட்டி அதே நாளில் நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன், மாணாக்கர்களுக்கான கல்விச் சான்றிதழும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆளுநரின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பெற்றோர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.