டெல்லி: சீன கேம் செயலியான பப்ஜி கேமுக்கு இந்திய அரசு அதிரடியாக தடை விதித்த நிலையில்,  அதன் தாய் நிறுவனமான டான்சென்ட் (Tancent)  கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது.
இந்தியாவில் பப்ஜி உட்பட 118 சீன செயலிகளுக்கு 3வது கட்டமாக கடந்த இரு நாட்களுக்கு முன்பு இந்திய அரசு அதிரடியாக தடை விதித்தது. இதையடுத்து, கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் அப் ஸ்டோரிலும் இருந்து பப்ஜி கேம் அகற்றப்பட்டுள்ளது.
இநத் நிலையில், பப்ஜி கேம் செயலி தயாரிப்பு நிறுவமான டான்சென்ட் நிறுவனம் கடுமையான வருவாய் இழப்பை சந்தித்து உள்ளதாக கூறப்படுகிறது.  பப்ஜி உள்பட பல சீன மொபைல் செயலி களுக்கு இந்தியாவிலேயே கடுமையான வரவேற்பு இருந்த நிலையில், மத்தியஅரசின் அதிரடி நடவடிக்கை காரணமாக சீன செயலி நிறுவனங்கள் ஆடிப்போய் உள்ளன.
ஏற்கனவே டிக்டாக் செயலி உள்பட ஏராளமான செயலிகள் தடை விதிக்கப்பட்ட நிலையில், 3  கோடிக்கும் அதிகமானோர் விளையாடி வந்த பப்ஜி கேமுக்கு தடை விதிக்கப்பட்டது, சீன பொருளா தாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய அரசின் அதிரடி தடையைத் தொடர்ந்து  டென்சென்ட்  நிறுவனத்தின் சந்தை மதிப்பு அதிரடி யாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்தியா டென்சென்ட் நிறுவனத்தின் மிக முக்கிய சந்தையாக திகழ்கிறது.
ஏற்கனவே, கடந்த மாதம் அமெரிக்கா டான்சென்ட்  நிறுவனத்தின் WeChat செயலியை தடை செய்தது. இது  பேரிழப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தியஅரசு எடுத்த அதிரடி நடவடிக்கை,  டான்சென்ட் நிறுவனத்தை நிலைகுலைய செய்துள்ளது. 
இந்திய அரசு தடை செய்த இரண்டு நாளில் சுமார் 2 லட்சம் கோடி வருமானத்தை  டான்சென்ட் நிறுவனம் இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.