சென்னை: பப்ஜி மதன் வழக்கில், 1600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சைபர் கிரைம் போலீசார் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
சமூக வலைதளத்தில் ஆபாசமாக பேசியதாகவும், கொரோனா காலத்தில் உதவி செய்வதாகவும் பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றியதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக, 2,848 பேரிடம் ரூ.2.89 கோடி பெற்றதாக பப்ஜி மதன் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக ‘ பப்ஜி மதனை போலீசார் கைது செய்தனர். அவர்மீது குண்டம் சட்டம் பாய்ச்சப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், இதனையடுத்து பப்ஜி மதன் மற்றும் அவரது மனைவி கீர்த்திகா மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சைபர் கிரைம் போலீசார் 1,600 பக்க குற்றப்பத்திரிகையை இன்று தாக்கல் செய்தனர்.
அதில், வழக்கு தொடர்பாக, 150க்கும் மேற்பட்டோர் புகாரளித்த நிலையில் 32 பேர் மட்டுமே எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளதாகவும், 32 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.