சென்னை: தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தவுடன், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் உடன் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மரியாதை செலுத்தினார்.

தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்ற பிறகு, கடந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று முழுமையான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதிநிலை அறிக்கையில் பல்வேறு வளர்ச்சிகளுக்கு நிதிகள் தாராளமாக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய பட்ஜெட் தாக்கல் முடிவடைந்ததும், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் சேகர்பாபு, பழனிவேல் தியாகராஜன் மரியாதை செலுத்தினர்.
Patrikai.com official YouTube Channel