சென்னை: போர் நடைபெற்று வரும் உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய தமிழக மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். அதன்படி, மனநல ஆலோசனை வேண்டுவோர் 104 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் அழைத்து ஆலோசனை பெறலாம்.
சென்னையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்களுக்கு மனநல ஆலோனை வழங்கும் மையத்தை முமருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். அதன்படி, 104 என்ற எண்ணை தொடர்புகொண்டு உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்கள் இலவச ஆலோசனை பெறலாம் என்றும் கூறினார்.
உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மத்திய அரசின் ஆபரேசன் கங்கா திட்டத்தின் மூலம்,உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் அண்டை நாடுகள் வழியாக மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.அந்த வகையில்,இதுவரை 17,400 பேர் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
எனினும்,உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.அந்த வகையில்,வெளிநாடு வாழ் தமிழர் நல ஆணையத்திற்கு ரூ 3.5 கோடி ஒதுக்கீடு செய்து ஏற்கனவே தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து,உக்ரைனிலிருந்து நாடு திரும்பியுள்ள மருத்துவ மாணவர்கள், இந்தியாவிலேயே தங்களது படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில்,உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
104 என்ற கட்டணமில்லா அழைப்பு மூலம் ஆலோசனை தரும் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைக்கிறார். அதன்படி, உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் ‘104 என்ற கட்டணமில்லா அழைப்பு’ மூலம் மனநல ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தை தொடங்கி வைத்த அமைச்சர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, உக்ரைனில் மருத்துவ கல்வி படித்து வரும் மாணவர்களின் எதிர்கால மருத்துவ படிப்பை தொடர்வதற்கு மத்திய அரசு உதவிட வேண்டும் என்றும் இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் இவர்களை சேர்க்க வேண்டும் எனவும் முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளதாக கூறியதுடன், உக்ரைனில் இருந்து வந்த மாணவர்கள் படிப்பை தொடர் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும், உக்ரைனில் இருந்து தமிழர்களை மீட்க சென்னையில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் இருந்து டெல்லி வரும் மாணவர்கள் சென்னை அழைத்துவரப்படுகிறார்கள். இதுவரை 1,456 மாணவர்கள் உக்ரைனில் இருந்து தமிழகம் அழைத்து வரப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டவர், ரஷ்யா – உக்ரைன் போரால் தாயகம் திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக மன ஆலோசனை என்பது அவசியமானது. தமிழக மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் 20 மனநல ஆலோசகர்கள் இன்றும், நாளையும் 1,456 மாணவ, மாணவிகளுடன் தொடர்புகொண்டும், அவர்களின் பெற்றோர்களிடமும் பேசி உரிய ஆலோசனை வழங்குவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.