ஸ்ரீஹரிகோட்டா:
சிங்கப்பூரின் இரு செயற்கைக்கோள்களுடன், இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி சி-55 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது.

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இன்று பிற்பகல் 2.19 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது.

இதற்கான கவுன்ட் டவுன் நேற்று பிற்பகல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இஸ்ரோவின் வணிக அமைப்பான நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் கீழ், 741 கிலோ எடை கொண்ட ‘டெலியோஸ்-2’ (TeLEOS-2) என்ற புவி கண்காணிப்பு செயற்கைக் கோளும் கடற்பாதுகாப்பிற்கான 16 கிலோ எடை கொண்ட லுமிலைட்-4 (LUMILITE-4) என்ற இரு செயற்கைக்கோள்கள் இன்று அனுப்பப்படுகின்றன.