புதுக்கோட்டை
இனி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மளிகைக் கடைகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் திறக்க வேண்டும் என ஆட்சியர் உமா மகேஸ்வ்ர் உத்தரவு இட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த கடந்த 24 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 27 ஆம் தேதி தமிழகத்தில் பாதிப்புக்கள் அதிகரித்ததால் பெட்ரோல் பங்குகள், மளிகை மற்றும் காய்கறிக் கடைகள் காலை 6 மணி முதல் பகல் 2.30 வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
வரும் 14 ஆம் தேதி ஊரடங்கு முடிவடைவதால் இன்று மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி கலந்தாலோசனை செய்தார். அப்போது மாநில முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் நடவடிக்கைகளைக் கடினமாக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து மளிகைக் கடைகளும் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே திறக்க வேண்டும் என உத்தரவு இட்டுள்ளார். மேலும் இந்த உத்தரவை மீறும் மளிகைக்கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.